ADVERTISEMENT

கேட்குதா… கேட்குதா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நீங்க பிஜேபி மத்திய அரசைக் கேட்டீங்களானு திமுக காரங்க கேட்குறாங்க. நீங்க கர்நாடக காங்கிரஸ் அரசைக் கேட்டீங்களானு அதிமுக காரங்க கேட்குறாங்க. ஆனா டெல்டா காரன், ‘தண்ணி எப்போ வரும்னு? கேக்குறான். மேட்டூர் அணை மாதிரியே எல்லார் வாயும் மூடிக் கெடக்குது… காவேரி கடல்ல கலக்குதோ இல்லையோ, அரசியல் காவேரியில கலந்து நாசமா போச்சு.
நீங்க அப்டேட் பாருங்க

ADVERTISEMENT

சரவணன். ????
படிச்சதால தான் வேலைக்கு போனேன், நல்லா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க..
படிச்சாரா படிக்கலையான்னு தெரியாத மோடி பிரதமராவே இருக்காரு.. போவியா

ADVERTISEMENT

மயக்குநன்
அதிமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது!- இபிஎஸ்.
ஆமாமா… தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை முதல்வரே டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கிற அளவுக்கு சிறப்பா இருந்துச்சு..!

ADVERTISEMENT

mohanram.ko
ஹெல்மெட் போட்டிருந்தால் மட்டுமே, தர்மம் தலை காக்கும் .
(இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு)

Mannar & company
குழந்தை தூங்குற நேரத்தில் எல்லா வேலையும் பார்த்தது போயி மொபைல் போனுக்கு சார்ஜ் ஆகுற நேரத்தில் வேலையை பார்க்கிற அளவில் இருக்கு வாழ்க்கை!!

Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
‘இஸ்ரேல் செல்ல அனுமதித்தால்…இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை உடனே நிறுத்திவிடுவேன்’னு சீமான் ஏன் இன்னும் சொல்லலலைன்னு கேட்கிறாம்பா!

ச ப் பா ணி
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கிச் சென்றவனின் அப்டேட் வெர்சன் தான்..
Gpay work ஆகாமல் திரும்பி செல்வது

தர்மஅடி தர்மலிங்கம்
‘சந்திரசேகர ராவ் NDA கூட்டணியில் இணைய விரும்பினார் நான் அதை நிராகரித்தேன்’ – பிரதமர் மோடி!
ஆமாமா… தெலுங்கானாவுக்கு நீங்க போனபோது உங்கள பார்க்காம எத்தனை முறை நிராகரிச்சுருப்பாரு அதுக்கு பழிவாங்கனுமில்ல ஜி!

mohanram.ko
இஸ்ரேல் க்கு துணை நிற்போம் – பிரதமர்
அப்ப மணிப்பூருக்கு?
இஸ்ரேல் துணை நிற்கும்

கோழியின் கிறுக்கல்!
இப்பெல்லாம் அடிக்கடி Bank Balance check பண்றேன்,
எவனாவது தெரியாமல் போட்டால் உடனே Loan Accountக்கு மாற்றி விட்டுடுலாம்னு!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹீரோயினாக நடிக்கும் பிக் பாஸ் ஜோவிகா : அதுவும் 2 படங்கள்!

சட்டமன்றத்தில் வேல்முருகனுக்கு விசேஷ சலுகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share