“இதெல்லாம் கேவலமான செயல்” : சாய் பல்லவி காட்டம்!

Published On:

| By Kavi

marriage rumours Sai Pallavi

தனது திருமணம் குறித்து பரவும் தகவலுக்கு நடிகை சாய் பல்லவி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. இவரது நடனத்துக்கே ஏராளமாக ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ADVERTISEMENT

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கழுத்தில் மாலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்திலேயே எஸ்.கே.21 பூஜை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி கழுத்தில் மாலையுடன் இருக்கும்படி மட்டும் கிராப் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதில் ராஜ்குமார் பெரியசாமிக்கும், சாய் பல்லவிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 22) சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

ADVERTISEMENT

marriage rumours Sai Pallavi

அதில், நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் தற்போது பரவியிருக்கும் தகவல் குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருப்பதால் பேச வேண்டியிருக்கிறது.

எனது படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட ஒரு படம் வேண்டுமென்ற சித்தரிக்கப்பட்டுள்ளது. அது பணம் கொடுத்து கேவலமான நோக்கத்தோடும் பரப்பப்பட்டுள்ளது.

எனது படம் குறித்து மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் இதுபோன்ற தேவையில்லாத செயல்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது வேதனையளிக்கிறது.

இது போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்துவது கேவலமான ஒன்று” என்று கட்டமாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிக்கிறார்கள், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்று வதந்திகள் பரவியது. இதற்கு கீர்த்தி சுரேஷும், அவரது தந்தை சுரேஷ் குமாரும், “அப்படியெல்லாம் இல்லை. அனிருத் நல்ல நண்பர்” என்று பதிலளித்திருந்தனர்.

அவரைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவுக்கும் மலையாள தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் என்று வதந்தி பரவியது. இதற்கு, வதந்திகளை பரப்பாதீர்கள் என்று த்ரிஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

அருணாச்சல் வீரர்களுக்கு மறுப்பு : சீன பயணத்தை ரத்து செய்த அமைச்சர்!

துக்க நிகழ்ச்சிகளில் வரம்பு மீறும் ஊடகங்கள்: நடிகர் சங்கம் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share