தமிழக முதல்வர் விஜய்யை இழிவாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட நெல்லையைச் (Nellai) சேர்ந்த ஜேம்ஸ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜேம்ஸ் (வயது 30) என்ற இளைஞர் சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய்யை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் ஜேம்ஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று மே 25-ந் தேதி கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜேம்ஸ், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே முதல்வர் விஜய்யை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மேலும் பலர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
