Delhi Protest: அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

டெல்லியில் ஜந்தர் மந்தர் நோக்கிப் போராடச் செல்ல முயன்ற முன்னாள் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SIR விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் நோக்கி மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்றார். அப்போது, மத்திய டெல்லியில் உள்ள சவுத் அவென்யூ பகுதியில் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் அருகே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை அதிரடியாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஒன்றிய அரசு எங்களைத் தவறாக வழிநடத்துகிறது; ‘இந்தியா’ கூட்டணியாகிய நாங்கள் மக்களின் குரலை வெளிப்படுத்தத் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதேபோல் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனும் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதவருமான அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் பங்கேற்க பேரணியாக செல்ல முயன்றபோது, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி போராட்டம் குறித்து தனது எக்ஸ் பதிவில், “இது அவசர நிலைக் காலத்தைவிட மோசமானது. இது அதிகாரப்பூர்வமானது. நாம் மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே ‘கரப்பான் பூச்சிகளை’ கைது செய்வது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தை வெளிப்படுத்துகிறது.வாக்குத் திருட்டு மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும். இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்குவதன் மூலம் அந்த மோசடியைப் பாதுகாப்பதில் அவர் தீவிரமாக உள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; ஆனால் மோடியும் பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share