70 விழாக்களில் திரையிட்டு 46 விருதுகளை வென்ற மாமனிதன்!

By Kavi

|

Published on 14 Oct 2022, 6:39 AM

மாமனிதன் படம் இதுவரை 46 விருதுகளை வென்றுள்ளது.

விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்து ஜூன் மாதம் வெளியான படம், ‘மாமனிதன்’.

ADVERTISEMENT

சீனு ராமசாமி இயக்கி இருந்தார். இந்தப் படத்தை அடுத்து 3 படங்களை இயக்க இருப்பதாக கூறியுள்ளார் சீனுராமசாமி.

வழக்கமான மசாலா சினிமாக்களை இயக்காமல் மண்சார்ந்த, மரபு சார்ந்த, மக்களுக்கான திரைப்படங்களை மட்டுமே இயக்குவேன் என்பதில் உறுதியாக இருக்கும் சீனுராமசாமி அடுத்து இயக்க உள்ள படங்களை பற்றி கூறுகிறபோது,

ADVERTISEMENT

“சினிமா பல சவால்களை இன்று எதிர்கொண்டிருக்கிறது. சிறுபட்ஜெட் மற்றும் நல்ல கதைகளைக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை.

இதற்கிடையே அசல் தன்மையோடும், உலக சினிமா மொழியோடும் வருகிற படங்களுக்கு ஓடிடி தளங்களில் வரவேற்பு கிடைக்கிறது.

ADVERTISEMENT

திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு குறைவாக இருந்தாலும் ஓடிடி தளத்தில் ‘மாமனிதன்’ சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதுவரை 70 சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு 46 விருதுகளைப் பெற்றிருக்கிறது. அடுத்து 3 படங்கள் இயக்க இருக்கிறேன்.

‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் தயாரித்து, நடிக்கும் படம், சி.வி.குமார் தயாரிக்கும் படம், ராகுல் தயாரிக்கும் படங்களை இயக்க இருக்கிறேன்.

நான் இயக்கி இருக்கிற, ‘இடிமுழக்கம்’, ‘இடம் பொருள் ஏவல்’ படங்கள் ஜனவரிக்குள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

பரங்கிமலையில் மாணவி கொலை: டார்ச்சர் செய்த இளைஞர்!

பாஜகவினரின் காதைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும்: மம்தா

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel