மகளிர் உரிமைத் தொகை எப்போது?: விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Kavi

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

விஜய் அறிவிப்பு!

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “ பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஸ்டாலின் கேள்வி

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,  “மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?

ADVERTISEMENT

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது மாதம் மாதம் மகளிருக்கு உரிமைத் தொகைகாக திமுக ரூ.2000, தவெக ரூ.2500  வழங்கப்படும் என்று அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share