VIDEO: மதுரை–குருவாயூர் விஸ்டாடோம் ரயில் பெட்டி உள்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

Published On:

| By Mathi

Guruvayur Express-Vistadome Coach

மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 22-ந் தேதி முதல் விஸ்டாடோம் ஏசி பெட்டி இணைக்கப்பட உள்ள நிலையில், அந்தப் பெட்டியின் உட்புற வசதிகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் விஸ்டாடோம் பெட்டியின் உள்ளே நீல நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு இருக்கைகள், பெரிய கண்ணாடி ஜன்னல்கள், மேற்கூரையில் உள்ள கண்ணாடிப் பகுதிகள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இருக்கைகளுக்கு நடுவே பயணிகள் நடந்து செல்ல வசதியாகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் வழியாக மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியும்.

மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை–புனலூர் மலைப்பாதை வழியாக இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடியே பயணம் செய்வதற்காக விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16327) ரயிலில் அக்டோபர் 22-ந் தேதி முதலும், மறுமார்க்கத்தில் குருவாயூர்–மதுரை எக்ஸ்பிரஸ் (16328) ரயிலில் அக்டோபர் 23-ந் தேதி முதலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

விஸ்டாடோம் பெட்டியின் உட்புற வசதிகளை விளக்கும் தெற்கு ரயில்வே வெளியிட்ட வீடியோ தற்போது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share