அட.. நம்ம குருவாயூர் எக்ஸ்பிரஸில் முதல் முறையாக ‘விஸ்டாடோம்’ கோச்.. அக்.22 முதல் இயற்கையை ரசித்தபடி பயணிக்க சூப்பர் வசதி!

Published On:

| By Mathi

Madurai Guruvayur Express- Vistadome

ரயில் பயணத்தின்போது இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை ரசிப்பதற்காக, தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக விஸ்டாடோம் (Vistadome) குளிர்சாதன ரயில் பெட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. மதுரை–குருவாயூர்–மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 22-ந் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்தப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பெட்டியில் இயற்கைக் காட்சிகளைப் பரந்த கோணத்தில் பார்க்கும் வசதி, விசாலமான இருக்கைகள், நவீன உள்கட்டமைப்பு, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மதுரையில் இருந்து எப்போது?

மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் 16327 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 22-ந் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி வரை விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த ரயில், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஸ்டாடோம் பெட்டியுடன் இயக்கப்படும்.

குருவாயூரில் இருந்து எப்போது?

குருவாயூரில் இருந்து மதுரை வரும் 16328 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 23-ந் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி வரை விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த ரயில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் விஸ்டாடோம் பெட்டியுடன் இயக்கப்படும்.

ரயிலில் எத்தனை பெட்டிகள்?

விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்பட்ட பிறகு இந்த ரயிலில் ஒரு விஸ்டாடோம் குளிர்சாதன இருக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏசி 3 அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 சாதாரண படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்புப் பொதுப் பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு மற்றும் பிரேக் வேன் இடம்பெறும்.

விஸ்டாடோம் பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை–குருவாயூர் வழித்தடத்தில் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணம் செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share