சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொறுப்பு அமைச்சர்கள் சென்னை வருமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக எட்டு பேர் நியமிக்கப்பட்டனர்.
திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதிக்கு அமைச்சர் ரமேஷ், தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் பகுதிக்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன், ராயபுரம் மற்றும் திருவிக நகர் பகுதிக்கு அருண் ராஜ், அம்பத்தூர் அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதிக்கு விஜய பாலாஜி,
கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிக்கு அமைச்சர் பிரபு, ஆலந்தூர் மற்றும் அடையார் பகுதிக்கு விஜய் தமிழன் பார்த்திபன், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிக்கு அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அதீத கனமழை சென்னையில் கொட்டி தீர்த்துள்ளது.
பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு மின்சாரம் தடைப்பட்டது. இன்னும் சில இடங்களில் மின்சாரம் வரவில்லை.
நுங்கம்பாக்கம் ஜெமினி மேம்பாலம், ராயபுரம் ஜிபி சாலை, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியு உள்ளது.
இந்த சூழலில் சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாக சென்னைக்கு வருமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
