ஒரே ஒரு இரவுதான்யா.. வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை… பாரிமுனையில் 36 செ.மீ… உங்க ஏரியாவில் எவ்வளவு?

Published On:

| By Mathi

Chennai-Rain-Full Details

சென்னையில் நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், அதிகபட்சமாக பாரிஸில் (பாரிமுனை) 36.34 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழையால் பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 39 மழைமானி நிலையங்களில் பதிவான மழை அளவு விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சென்னையில் அதிகபட்சமாக பாரீஸ் கார்னர் (பாரிமுனை) பகுதியில் 363.4 மி.மீ. (36.34 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கத்திவாக்கத்தில் 344.4 மி.மீ. (34.44 செ.மீ.), எண்ணூரில் 215.8 மி.மீ. (21.58 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சைதாப்பேட்டையில் 170.2 மி.மீ. (17.02 செ.மீ.), ஐஸ் ஹவுஸில் 138.6 மி.மீ. (13.86 செ.மீ.), மடிப்பாக்கத்தில் 122.1 மி.மீ. (12.21 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. மணலி நியூ டவுன், சாலிகிராமம் ஆகிய பகுதிகளில் தலா 121.8 மி.மீ., வளசரவாக்கத்தில் 121.2 மி.மீ., மடிப்பாக்கத்தின் மற்றொரு மழைமானி நிலையத்தில் 114.2 மி.மீ., வளசரவாக்கத்தில் 108.6 மி.மீ., மணலி நியூ டவுனில் 100.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மணலியில் 97.2 மி.மீ., புழலில் 92.4 மி.மீ., நாராயணபுரம் ஏரி பகுதியில் 91.2 மி.மீ., நெற்குன்றத்தில் 90.6 மி.மீ., பள்ளிக்கரணையில் 86.2 மி.மீ., மதுரவாயலில் 78.3 மி.மீ., விம்கோ நகரில் 71.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சென்னையின் வடபகுதிகளில் மிக அதிக கனமழை பதிவாகியுள்ள நிலையில், தென்சென்னையின் சில பகுதிகளில் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக வேளச்சேரியில் 20.7 மி.மீ., கொளத்தூரில் 16.4 மி.மீ., மேடவாக்கம் சந்திப்பு மற்றும் நீலாங்கரையில் தலா 4.8 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 39 மழைமானி நிலையங்களில் பதிவான மழை அளவு விவரம்:

(ஆதாரம்: https://beta-tnsmart.rimes.int/index.php/Rainfall/gcc_day)

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share