குடும்பம் பற்றி அவதூறு: தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் நோட்டீஸ்!

Published On:

| By Mathi

Martin Lottery

லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் தமது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக புதுவை லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளதாவது: எனது குடும்பத்தை குறித்து பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பி, எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, லால்குடி தவெக வேட்பாளர் கு. ப. கிருஷ்ணனுக்கு எதிராக, எனது தந்தை மார்டின் சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்நோட்டீஸில், பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும், ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகவல்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், 15 நாட்களுக்குள் இந்திய சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் கு. ப. கிருஷ்ணன் மீது வழக்குத் தொடரப்படும் என தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார். லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, தவெக வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share