மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

MKStalin DMK candidates

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மைக்கு 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கும் ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் விஜயை இரண்டு முறை அழைத்து பேசியும் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்காத பரபரப்பான அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share