வைஃபை ஆன் செய்ததும், “முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. பக்தி பரவசமா ப்ரோ?
உங்க வசதிக்கு எப்படியோ அப்படி நினைச்சுக்குங்க ப்ரோ.. இப்ப நான் சொல்ல போறதும் கூட மத்திய அமைச்சர் பதவியில இருந்து ராஜினாமா செஞ்ச எல்.முருகனை பத்திதான்..
ஆனாலும், ”2029 லோக்சபா எலக்ஷனுக்கு இப்பவே ராஜினாமா செய்யுறாரா? நம்புற மாதிரி இல்லையே.. மத்திய அமைச்சரவை விரிவாகத்துக்காகவே முருகனை ராஜினாமா செய்ய சொல்லிட்டாங்களா? ஃபெர்பார்மன்ஸ் சரி இல்லைன்னு பிஎம் மோடியே ராஜினாமா செய்ய சொன்னாரா?” அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள்..
இன்னொரு பக்கம், தமிழக பாஜகவில் முருகன் ராஜினாமா செய்தி வந்த உடனே, அட்வான்ஸா தீபாவாளி கொண்டாட்டமும் களைகட்டிடுச்சு.. அந்த அளவுக்கு ஹேப்பியாகிட்டாங்க..
எல். முருகன் ராஜினாமா விவகாரத்துல உண்மைதான் என்னங்க ப்ரோ..
ஆமாங்க ப்ரோ.. எதுக்காக எல்.முருகன் திடீர்னு ராஜினாமா செஞ்சாரு டெல்லி பாஜக சோர்ஸ்கள்கிட்ட விசாரிச்சோம் ப்ரோ.. நம்ம சோர்ஸ்கள் அடுக்கடுக்காக சொன்ன காரணங்களை ஒவ்வொன்னா ஷேர் செய்றேன் ப்ரோ..
அதாவது, எல்.முருகன் மீது பிஎம் மோடிக்கு ரொம்பவே மரியாதை இருந்தது.. அதனால தமிழக பாஜக தலைவர் பதவி, மத்திய அமைச்சர் பதவி, லோக்சபா- சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புன்னு கொடுக்கப்பட்டுச்சு.. அவர் போட்டியிட்ட எலக்ஷன்களில் ஜெயிக்காத போதும் அவர் குட்புக்கிங்கில்தான் இருந்தார்..

ஆனா இப்ப கொஞ்ச நாளாகவே இந்த குட்புக்கிங் ரேங் குறைஞ்சுகிட்டே போனது.. பொதுவாக பிஎம் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போது மத்திய இணை அமைச்சர், தமிழ்நாட்டுக்கான பிரதிநிதின்னு அவருக்கு எப்பவுமே முக்கியத்துவம் இருக்கும்.. ஆனா இந்த டைம் 2 நாட்களுக்கு முன்னாடி பிஎம் மோடி வந்தப்ப, எல்.முருகனை உள்ளே அனுப்பும் போதே அவரோட செல்போனை கொடுத்துட்டு போக சொல்லிட்டாங்க.. பிஎம்-க்கு சால்வையும் போட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இதுலேயே முருகன் செம்ம அப்செட்.. இப்ப பிஎம் மோடி வந்துட்டு போன 2 நாளிலேயே மத்திய அமைச்சர் பதவி, எம்.பி. பதவி ரெண்டையுமே முருகன் ராஜினாமா செஞ்சுட்டாரு..
முருகன் தொடர்புடைய பல ”விவகாரமான சமாச்சாரங்களுக்கு” அவருடைய ’ஆல் இன் ஆல்’ கவியரசுதான் காரணம்னு பிஎம் ஆபீசுக்கு தொடர்ந்து கம்ப்ளெயிண்ட் போனது.. இதனால அந்த கவியரசுவை தூக்கிட சொல்லி மேல இருந்து ஆர்டர் போட்டாச்சு.. அதன்படியே கவியரசுவை நீக்கியாச்சுன்னு சொல்லிட்டார் முருகன்.

ஆனாலும் கவியரசுவை முருகன் விட்டுவிடலை.. அவரை அப்பீசியலா நீக்கிட்டாலும் கூடவே வெச்சிகிட்டுதான் இருந்தாரு.. இப்ப பிஎம் சென்னைக்கு வந்தப்ப கூட, கவியரசு பேரை பாஜக ‘காரியகர்த்தா’ன்னு லிஸ்ட்ல சேர்த்து பிஎம் மோடியை பார்க்க வெச்சிருக்கிறார்.. கவியரசு தான் வெளிநாட்டுக்கு போறதால கடைசியா பிஎம் மோடியை பார்த்துட்டு போறேன்னு சொன்னார்.. அதனால அவர் பேரை சேர்த்திருத்தாங்க.. இது பத்தியும் பிஎம் ஆபீசுக்கு கம்ப்ளெயிண்ட் போனது..
இதுக்கு நடுவில, எல்.முருகன் மேல டெல்லியில அவரு சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் பிஎம் ஆபீசுக்கு புகார் அனுப்பிட்டாங்க.. அந்த புகார் உண்மைதானா? அப்படின்னு விசாரிக்கவும் ஆர்டர் போட்டது பிஎம் ஆபீஸ்.. இந்த விசாரணையோட ரிப்போர்ட்டைப் பார்த்த பிஎம் மோடி, செம்ம கோபமாகிட்டாரு..
அந்த கோபத்தோட ரிசல்ட்தான் அமைச்சர் பதவியை மட்டுமில்லாம எம்.பி. பதவியையும் சேர்த்து ராஜினாமா செஞ்சுட்டாரு எல்.முருகன்”-ன்னு விவரிக்கிறாங்க ப்ரோ..
ஓஹோ.. இவ்வளவு நடந்திருக்கா ப்ரோ?
அதுமட்டுமல்ல ப்ரோ.. திண்ணை எப்ப காலியாகும்னா வெயிட்டிங்கில இருக்கிற தமிழக பாஜகவின் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன்னு பலரும் எல்.முருகன் கோட்டாவை ஃபில் பண்ண ராஜ்யசபா எம்.பி.யாகி மத்திய அமைச்சராகிடனும்னு ஏகப்பட்ட லாபிகளில்ல ரொம்பவே பிஸியாகிட்டாங்களாம் ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
