தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
கொளத்தூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கொளத்தூர்.. திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற தொகுதி. 2011, 2016, 2021-ல் தொடர்ந்து இங்கே முதல்வர் ஸ்டாலின் ஜெயிச்சாரு.. 2011-ல் சைதை துரைசாமி, 2016-ல் ஜேசிடி பிரபாகர், 2021-ல் ஆதிராஜாராம் அதிமுக வேட்பாளர்களாக ஸ்டாலினை எதிர்த்து நின்னாங்க..
இதுல ஜேசிடி பிரபாகர் இப்ப தவெகவுக்கு போயிட்டார்.. ஆதிராஜாராம், ஸ்டாலின் மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுகிறார்..
இந்த முறை முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுகவின் சந்தானகிருஷ்ணன் களம் காண்கிறார். தவெக சார்பில் அதிமுக மாஜி கவுன்சிலர் விஎஸ் பாபு, நாதக சார்பில் சவுந்தரபாண்டியன் இங்கே களம் காண்கிறார்கள்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 51%
அதிமுக –21%
தவெக-19 %
நாதக-6% வாக்குகள் பெறும்
முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
