தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
ராயபுரம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ராயபுரம்.. இதுவும் மிக முக்கியமான தொகுதி… அதிமுகவின் சீனியர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டியிடும் தொகுதி. 1991 முதல் 2011 வரை தொடர்ந்து ஜெயக்குமார் ஜெயித்த தொகுதி. போன 2021 தேர்தலில் ஜெயக்குமாரை திமுகவின் ஐட்ரீம் மூர்த்தி தோற்கடிச்சார். இந்த முறை ராயபுரத்தில் ஜெயக்குமாரை எதிர்த்து திமுகவில் டாக்டர் சுபேர்கான் நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுகவின் கனல் தெறிக்கும் பேச்சாளர் சட்டசபை நாயகர்களில் ஒருவராக திகழ்ந்த ரகுமான்கான் மகன் சுபேர்கான்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக –38 %
அதிமுக –30%
தவெக- 25%
நாதக-6% வாக்குகள் பெறும்
திமுக முன்னிலையில் இருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
