தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் ஸ்டாலின் பேச்சு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

eps campaign

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. இதனிடையே இந்த தொகுதி மறுவரையறையால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் 50,60 களில் இருந்த பழைய திமுகவை இந்தியா திரும்பி பார்க்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்நிலையில் திமுகவின் தோல்வி பயமே முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செப்டம்பர் 16,17, 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த அவர், “நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டுவது அவர்களின் நிர்வாக முடிவு. 5 மாநிலங்களில் தான் தேர்தல் நடைபெறுகிறது மற்ற மாநிலத்தில் இல்லை.

ADVERTISEMENT

ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை வேண்டுமென்றே விமர்சித்து வருவது அவரது தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான். குறிப்பாக, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. அதனை நிறைவேற்றும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் முதல்வர் இது போன்ற கருத்துக்களைக் கூறி வருகிறார். ” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share