கொடைக்கானலுக்கு (Kodaikanal) சுற்றுலா செல்பவரா நீங்கள்.. அவசியம் இதை படிக்கவும்.
கொடைக்கானலில் பொதுவாக நட்சத்திர ஏரி, குணா குகை, பைன் மரங்கள், தூண் பாறை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்வது வழக்கம்.
கொடைக்கானல் மலைகளுக்கு நடுவே ஏராளமான இயற்கை பேரற்புதங்கள் பரவிக்கிடக்கின்றன. இதில் ஒன்றுதான் பேரிஜம் ஏரி, பேரிஜம் வனப்பகுதி.
கொடைக்கானலில் இருந்து எப்படி செல்வது?
கொடைக்கானல் நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் உள்ளது பேரிஜம் நன்னீர் ஏரி.
பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. பேரமைதியைத் தரக் கூடிய பிரதேசம் இது.
புவியல் அமைப்பின்படி இதன் அமைவிடம் Palani Hills- பழனி மலைகள். காப்பு காடுகள், அரியவகை கழுகள், அரியவகை குருவிகள் நிறைந்த வனப்பிரதேசம் பேரிஜம் பகுதி.
காட்டெருமைகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள்
பொதுவாக பேரிஜம் பகுதியில் மான்கள், காட்டெருமைகளின் உலாக்கள்தான் அதிகம். அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதும் உண்டு. சிறுத்தைகளும் வலம் வரும்.
யானைகள் நடமாட்டம்
கடந்த 1 வாரத்துக்கு முன்னர் பேரிஜம் வனப் பகுதியில் யானைகள் பெருங்கூட்டமாக நடமாடி வந்ததால் அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
புலிகள் படையெடுப்பு
தற்போது பேரிஜம் வனப் பகுதிக்கு புலிகளும் (Tigers) படையெடுத்து வந்துள்ளன. பேரிஜம் வனப் பகுதி சாலைகளில் புலிகள் நடமாடுவதை சுற்றுலா பயணிகள் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
பேரிஜம் வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் தற்போதைக்கு அப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் வனத்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
