நகராட்சி நிர்வாக முறைகேடு வழக்கு: கே.என்.நேரு மறு ஆய்வு மனு மீது நாளை தீர்ப்பு!

Published On:

| By Mathi

KN Nehru High Court

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதை மறுஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை (அக்டோபர் 9) தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர்கள் ஒதுக்கியதிலும், பணி நியமனங்கள் மேற்கொண்டதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

ADVERTISEMENT

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மறுஆய்வு மனு மீதான வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (அக்டோபர் 9) தீர்ப்பு வழங்க உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share