தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்துவதா? 42 முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!

Published On:

| By Mathi

EC-Former Judges

“இந்திய தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்துவதா? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) எதிர்ப்பதா?” என காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய 42 முன்னாள் நீதிபதிகள் பகிரங்க கடிதம் வெளியிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • இந்திய தேர்தல் ஆணையம், நீதித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
  • தேர்தல் ஆணைய அதிகாரிகளை ‘திருடர்கள்’, ‘கைப்பாவைகள்’, ‘நேர்மையற்றவர்கள்’ என்று விமர்சிப்பது ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும்.
  • ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளைச் செய்தியாளர் சந்திப்புகளில் முன்வைப்பதற்குப் பதிலாக, ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
  • தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கம் அளித்தாலும், அந்த விளக்கங்களைப் பொய் என்று நிராகரிக்கின்றனர்.
  • 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்த கட்சி, இப்போது தேர்தல் நடைமுறையே முறைகேடானது என்று குற்றம்சாட்டுகிறது.
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கை.
  • இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்களைச் சரி செய்து, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரின் பெயரையும் பட்டியலில் இடம்பெறச் செய்வதே SIR நடவடிக்கையின் நோக்கம்.
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
  • நீதிமன்றத் தீர்ப்புகள் தங்களுக்குச் சாதகமாக இல்லாதபோது நீதித்துறையையே குறிவைத்து விமர்சிப்பது தவறான போக்கு.
  • தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதும், அரசியலமைப்பு அமைப்புகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாப்பதும் ஜனநாயகத்துக்கு அவசியம்.
  • அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட வேண்டும்; தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கக் கூடாது; குறைகள் இருந்தால் ஆதாரங்களுடன் நீதிமன்றங்களை அணுக வேண்டும்.
  • ஊடகங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் ஊகங்களையும் சரிபார்க்காமல் பரப்பக் கூடாது.
  • தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, நியாயமான புகார்களுக்குத் தெளிவான பதில் அளிக்க வேண்டும்.
  • பொதுமக்கள் எந்தக் குற்றச்சாட்டையும் நம்புவதற்கும் பகிர்வதற்கும் முன்பு உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும்.
  • அரசியல் சாசன அமைப்புகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால் அவற்றை இழிவுபடுத்துவது ஜனநாயக உரிமை அல்ல.

கையெழுத்திட்டுள்ள முன்னாள் நீதிபதிகள்

  1. நீதிபதி ஹேமந்த் குப்தா
  2. நீதிபதி பங்கஜ் மித்தல்
  3. நீதிபதி பி.சி. படேல்
  4. நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி
  5. நீதிபதி பர்மோத் கோலி
  6. நீதிபதி எஸ்.எம். சோனி
  7. நீதிபதி எஸ்.என். திங்ரா
  8. நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித்
  9. நீதிபதி ஸ்ரீதர் ராவ்
  10. நீதிபதி ஆர்.எஸ். ரத்தோர்
  11. நீதிபதி பிரசாந்த் குமார் அகர்வால்
  12. நீதிபதி கே.கே. திரிவேதி
  13. நீதிபதி டி.கே. பாலிவால்
  14. நீதிபதி ராகேஷ் சக்சேனா
  15. நீதிபதி ராஜேந்திர குமார்
  16. நீதிபதி சுபாஷ் சம்வத்சர்
  17. நீதிபதி வேத் பிரகாஷ் சர்மா
  18. நீதிபதி அலோக் வர்மா
  19. நீதிபதி ஐ.எஸ். ஸ்ரீவஸ்தவா
  20. நீதிபதி சுபாஷ் சக்ரிகர்
  21. நீதிபதி எஸ்.பி. கரே
  22. நீதிபதி பி.என். சிங்
  23. நீதிபதி தேவேந்திர குமார் அரோரா
  24. நீதிபதி சுரேந்திர விக்ரம் சிங் ரத்தோர்
  25. நீதிபதி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா
  26. நீதிபதி ரமேஷ் குமார் மெராத்தியா
  27. நீதிபதி கரம் சந்த் பூரி
  28. நீதிபதி ராஜ் ராகுல் கர்க்
  29. நீதிபதி சி.வி. நாகார்ஜுன ரெட்டி
  30. நீதிபதி வினோத் கோயல்
  31. நீதிபதி ஜி.பி. மித்தல்
  32. நீதிபதி வி.பி. குப்தா
  33. நீதிபதி தீபா சர்மா
  34. நீதிபதி பி.என். ரவீந்திரன்
  35. நீதிபதி ஜோதீந்திரநாத்
  36. நீதிபதி லோக்பால் சிங்
  37. நீதிபதி சுபாஷ் சந்திரா
  38. நீதிபதி விவேக் பாரதி சர்மா
  39. நீதிபதி நரேந்தர் குமார்
  40. நீதிபதி ராஜேந்தர் குமார்
  41. நீதிபதி சுபாஷ் பத்ரா
  42. நீதிபதி ஜே.ஏ.பி. ஸ்ரீவஸ்தவா
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share