திமுகவில் இணைந்த சிபிஐ எம்.பி மகன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயனின் மகனும், திருப்பூர் மாவட்டம் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவருமான பாரதி சுப்பராயன் தலைமையில் நிர்வாகிகள் இன்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதுகுறித்து திமுக எக்ஸ் பதிவில், ” கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (08.10.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில், அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி. சுரேஷ், பொருளாளர் ஆர். பிரகாஷ் சந்திரன், துணை பொருளாளர் எ. செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

நவீன மனிதர்கள் அமைப்பின் சார்பில் தி.மு.க.வில் இணைவதற்கான காரணங்கள் அடங்கிய வாசகங்களை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.

ADVERTISEMENT

அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:

  • இதுவரை உள்ள 18 இந்தியப் பிரதமர்களில் இரண்டே பேர்தான் திராவிடர்கள். இந்த ஆரிய ஆதிக்கத்தை நிறுத்த!
  • 3% மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் எல்லா உயர் அதிகாரப் பதவிகளிலும் 70%க்கு மேல் ஆக்ரமித்திருப்பது எப்படி? இதை சீர்படுத்த!
  • மனித இனம் தோன்றி 3 லட்சம் ஆண்டுகளாகியும் சமத்துவம் இல்லையே! அதை நோக்கிப் பயணிக்க…!
  • அம்மாவாக, அக்காவாக, மனைவியாக இருந்தாலும் பெண்களுக்கு முழு அதிகாரம் கிடைப்பதில்லையே… அதைச் செயல்படுத்த…!
  • தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாய்க்கு 29 காசு மட்டும் திருப்பிக் கொடுக்கிறது ஒன்றிய அரசு. அதைக் கேள்வி கேட்க!
  • இன்றும் தூய்மைப் பணியாளர்களில் ஒடுக்கப்பட்ட சாதியினரே அதிகம். இந்த மூவாயிரமாண்டு சாதி இழிவைப் போக்க!
  • நவீன GenZக்கள் கூட திரையில் தம் தலைவர்களைத் தேடுகிறார்களே… அந்தத் திரைமோகத்திலிருந்து அவர்களை மீட்டு வழிகாட்ட…!
  • சமூக நீதி = அனைவருக்கும் அனைத்தும் – பெரியார்
  • தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் அடிமையாக இல்லாமல், யாருக்கும் எஜமானனாக இல்லாமல் யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே என் குறிக்கோள். – அண்ணா
  • அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது – கலைஞர்
  • திராவிட மாடல் என்பது எதையும் இழக்காது – உருவாக்கும்.
  • எதையும் சிதைக்காது; சீர் செய்யும்,
  • யாரையும் பிரிக்காது; அனைவரையும் ஒன்று சேர்க்கும்
  • யாரையும் தாழ்த்தாது; அனைவரையும் சமமாக நடத்தும்.
  • யாரையும் புறக்கணிக்காது; தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!
  • மு.க. ஸ்டாலின் வெற்றியின் போது பதவிக்காக இல்லை – தோல்வியின் போது தோள் கொடுக்க!

ஆகிய வாசகங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share