கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் எட்டு பேர் காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
நேற்று இரவு 11.50 மணி அளவில் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் கைப்பமங்கலம் காவல் சரகம் பரம்பிக்குன்னு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்கள் திண்டுக்கலை சேர்ந்த யுவ சஞ்சித் மற்றும் சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா மற்றும் சந்தோஷ், ஜோஸ்வா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஐடி கார்டு மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் திருச்சூர் மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறுவதை பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
இந்த சூழலில் மாணவர்கள் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக காரில் எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் அனைவரும் தம்ஸ் அப் காட்டி, மகிழ்ச்சியாக காரில் பயணிப்பது பதிவாகியுள்ளது.
