8 Dindigul Students Killed in Kerala Accident: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் நேற்று (செப்டம்பர் 4) நள்ளிரவில் நடந்த கோர சாலை விபத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளாவின் குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட கார், சாலைப் பணிகள் நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின் பகுதியில் அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
சரக்கு லாரியின் மீது மோதிய காரில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கு சிதறிக் கிடந்த அடையாள அட்டைகளை வைத்து மாணவர்கள் அனைவரும் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாலைப் பணிகள் நடைபெற்ற இடத்தில் உரிய எச்சரிக்கைப் பலகைகளோ அல்லது போதுமான வெளிச்சமோ இல்லாமல் சரக்கு லாரி நிறுத்தப்பட்டிருந்ததால் நள்ளிரவில் அதிவேகமாக வந்த நிலையில் திண்டுக்கல் மாணவர்களின் கார் மோதி இந்த கொடூர விபத்து நிகழ்ந்ததாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
