டிவி பாட்டு ஷோவில் ஜெயிக்க ஆசை.. ‘மெரினா’ கிளி ஜோதிடரின் ‘நிர்வாண பூஜை’யில் சிக்கிய இலங்கை தமிழ் பெண்!

Published On:

| By Mathi

Woman Cheated by Marina Astrologer

Woman Cheated by Marina Astrologer: டிவி சேனல் பாட்டு ஷோவில் ஜெயிப்பதற்காக தன்னை நம்பிய இலங்கை தமிழ் பெண்ணை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய சென்னை மெரினா கடற்கரை “கிளி ஜோதிடர்” கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் வசித்து வரும் 37 வயது இலங்கை பெண், டிவி சேனல் பாட்டு ஷோவில் கலந்து கொள்ள சென்னை வந்தார். சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி ஷோவில் கலந்து கொண்ட அப்பெண், மெரினா கடற்கரைக்கு சென்ற போது, அங்கு இருந்த கிளி ஜோதிடரிடம் வாக்கு கேட்டார். இதற்காக ரூ20,000 பணம் கொடுத்தார் அந்த பெண்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணிடம், “உங்களுக்கு நிர்வாண பூஜை பரிகாரம் செய்துவிட்டால் போதும்.. நீங்கள் பிரபலமடைந்துவிடுவீர்கள்” என ஆசைவார்த்தை காட்டினார் ஜோதிடர். இதனை நம்பிய அந்த இலங்கை தமிழ் பெண்ணும் உறவினர் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் ஆப் காலில் நிர்வாணமாக தோன்ற அதை வைத்து பூஜை செய்வதாக கிளி ஜோதிடர் கூறியிருக்கிறார். இதற்காக ரூ70,000 பணம் வாங்கினார் கிளி ஜோதிடர்.

இதனைத் தொடர்ந்து கனடா சென்ற அந்த பெண் மீண்டும் சென்னை வந்து கிளி ஜோதிடரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது கிளி ஜோதிடர், ”இன்னொரு முறை நிர்வாண பரிகார பூஜை செய்ய வேண்டும்” என சொல்லி ரூ1 லட்சம் பணம் கேட்டார். இதற்கு இலங்கை தமிழ் பெண் மறுக்க, “உன் நிர்வாண படங்கள் என்னிடம் இருக்கிறது” என மிரட்டல் விடுத்தார் கிளி ஜோதிடர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக இலங்கை தமிழ் பெண் புகார் கொடுக்க, யார் அந்த கிளி ஜோதிடர் என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தென்காசியில் பதுங்கி இருந்த இசக்கிமுத்து என்ற கிளிஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share