முதல்வர் இல்லம்: வெடித்த போலீஸாரின் துப்பாக்கி!

Published On:

| By Prakash

கேரள முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிஃப் ஹவுஸ்’ அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, இன்று (டிசம்பர் 6) காலை 9.15 மணியளவில் தவறுதலாக கைப்பட்டதில் தரையை நோக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை நடத்தி வரும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ADVERTISEMENT

தற்போது அந்த இல்லத்தில் முதல்வர் இல்லை என்றபோதும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

ADVERTISEMENT

அம்பேத்கர் நினைவுநாள்: நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை!

ஆன்லைன் குற்றம்: அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share