அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் சட்டமேதை அம்பேத்கரின் 66வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 6) அனுசரிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர். இந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவர் அம்பேத்கர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் போது மகாத்மா காந்தியும், அம்பேத்கரும் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளனர். அம்பேத்கர் எதார்த்தமானவர் என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ’அம்பேத்கரின் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்’ என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 6) காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஜெ.பிரகாஷ்
ஆன்லைன் குற்றம்: அமைச்சர் சொன்ன அட்வைஸ்!
ஜெ.அஞ்சலி: சசிகலாவை காக்க வைத்த தினகரன்