நானியுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் : பாடல் வெளியீடு!

Published On:

| By Kavi

நடிகர் நானியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நானி இருந்து வருகிறார். 

ADVERTISEMENT

தற்போது ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் தி பாரடைஸ் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். 

இந்த படத்தில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 24ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

ADVERTISEMENT

நடிகர் நானி நடித்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளார் 

“Yeshanagula” என்ற அந்த பாடலில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்தப் பாடலை காசர்லா ஷியாம் எழுத ஜானகி ரெட்டி, பிரபா ஆகியோர் பாடியுள்ளனர்.

ADVERTISEMENT

பாடல் வெளியான 2 மணி நேரத்தில் 1.6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 

முன்னதாக ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கிய தசரா படத்தில் நானி கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yeshanagula (From "The Paradise") (Telugu)
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share