ஐமேக்ஸில் ரிலீஸாகும் சூரியின் ’மண்டாடி’

Published On:

| By Kavi

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூரி.

ADVERTISEMENT

விடுதலை, மாமன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சூரி, ’மண்டாடி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  மதிமாறன் புகழேந்தி படத்தை இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

நாகப்பட்டினம் பகுதி மீனவர்களின் வாழ்வியல், அவர்களின் வாழ்வோடு பிணைந்த பாரம்பரியப் படகுப் போட்டிகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

ADVERTISEMENT

இதுகுறித்து படக்குழு வெளியிட்ட பதிவில்,  ”முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆக்‌ஷன்,  உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பை அனுபவிக்கலாம். ஐமேக்ஸ் தரத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் திரையிலும் படத்தை பார்க்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share