சுந்தரி கண்ணால் ஒரு சேதி… ரஜினியுடன் கயாடு லோகர்

Published On:

| By Kavi

ரஜினி சாரை பார்த்ததும் ‘சுந்தரி’ பாடல் தான் மனதில் ஓடியது. அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை என்று  கயாடு லோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கயாடு லோகர் தொடர்ந்து இதயம் முரளி படத்தில் நடித்தார். 

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி  படத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் விமான பயணத்தின் போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த புகைப்படத்தை கயாடு லோகர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

அந்த பதிவில், “நான் இன்னும் கனவு உலகத்தில் இருந்து மீளவில்லை. மிகப்பெரிய ரசிகையாக இருந்து எப்படியோ ஒரு விமானத்தில் ரஜினிகாந்த் சாருக்கு அருகிலேயே அமரும் வாய்ப்பு கிடைத்தது வரை…

இதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. அவரைப் பார்த்த அந்த நொடியில் என் மனதில் சுந்தரி பாடல் ஒலிக்க தொடங்கி உடனடியாக நான் கனவு உலகிற்கு சென்று விட்டேன். 

ADVERTISEMENT

இது விவரிக்க முடியாத எதிர்பாராத தருணம். இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாகிவிட்டது. என்றாவது ஒருநாள் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’  என்று பதிவிட்டுள்ளார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share