இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

Mannar & company
தினமும் வாக்கிங் போறீங்களே
இதிலிருந்து என்ன தெரிஞ்சுகிட்டீங்க?
வடை சூடா இருக்கும்போதே சாப்பிடணும்னு!

படிக்காதவன்
எவன் எவனோ விலை ஏத்துறான்
நீயும் விலையேத்து’ங்கிற மாதிரிதான்
இப்ப எல்லா பொருளும் விலையேறி நிக்குது…

ArulrajArun
விரைவில் சென்னை – கன்னியாகுமரி 8 வழி சாலை – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
-me to me ; பழைய splendor plus வச்சிருக்க எனக்கு 8 வழி சாலை எதற்கு

Mannar & company
ஒரே Toxic relationship ஆக இருக்கேன்னு ‘Toxic’ படத்துக்குப் போனால் அது இன்னும் மன உளைச்சலையும், மனவேதனையையும் தந்துவிட்டது!
-toxic

mohanram.ko
ஆளுக்’கால்’, நடப்பதை எல்லாம் வாக்கிங்னு சொல்றாங்க…..

பரமசிவம் ராமசாமி
“பான்” இண்டியா படத்துக்கான ஹீரோ மெட்டீரீயல்…வாறப்படாத தலை..முரட்டு தாடி ,மீசை…கையில் பயங்கர ஆயுதம்..கொலைவெறிப் பார்வை…அவ்வளவே!!??

Gerbera Saaral
PT பீரியட்டை மேக்ஸ் டீச்சர் வந்து எடுத்துக்கிற மாதிரி, கடுமையான வெயிலின் நடுவே ஒரு 20 நிமிடத்தை மழை வந்து எடுத்துக்கிச்சு..!

ச ப் பா ணி
எல்லா காத்திருப்பிலும்ஒரே கடுப்புதான்எவ்வளவு லேட்டா நாம வந்தாலும்அப்பவும் நம்மை காக்கவைப்பது தான்

லாக் ஆப்
