டெல்லி தமிழ் சங்கத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம்- சிறப்பு விருந்தினராக வெளியுறவுத் துறை அதிகாரி மதிவதனி பங்கேற்பு!

By Mathi

|

Published on 24 Nov 2026, 6:29 AM

Delhi Tamil Sangam- MEA Madhivathani

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் (நவம்பர் 22) தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘நிம்மதியும் மகிழ்வும் தருவது அன்றைய வாழ்வே! இன்றைய வாழ்வே!’ என்ற தலைப்பில் இந்தப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராகப் பங்கேற்றார். பட்டிமன்றத்தில் ‘நிம்மதியும் மகிழ்வும் தருவது அன்றைய வாழ்வே!’ என்ற தலைப்பில் பேராசிரியர்கள் மா.விஜயகுமார், இந்திரா ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசினர். இவர்களது கருத்துகளை மறுத்து, ‘இன்றைய வாழ்வே!’ என்ற தலைப்பில் கவிஞர் இனியவன் (எ) கே.பிரியல், கோவை நாகநந்தினி ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

ADVERTISEMENT

வெளியுறவுத் துறை அதிகாரி மதிவதனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

முன்னதாக, தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ் மகேந்திரன் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் வழக்கறிஞர் முனைவர் ஜி.சிவபாலமுருகன், பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைச் செயலாளர் இரா.இராஜ்குமார் பாலா, பொருளாளர் பாலமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

மேலும், செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி ராமநாதன், ஆ.வெங்கடேசன், ரேவதி ராஜன், பி.ராமமூர்த்தி, ஆர்.கணேசன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பட்டிமன்றப் பேச்சாளர்களை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.தேவநாதன் நன்றி தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel