இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் நேற்று (மே 10) வெளியான ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கனவு காணும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனின் விடாமுயற்சியும் போராட்டமுமே இந்த படத்தின் கதை சுருக்கம்.
தற்போது ஸ்டார் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 3.4 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் 2.8 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இதுவரை தமிழில் வெளியான படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் கவின் “ஸ்டார்” திரைப்படம் 6 வது இடத்தை பிடித்திருக்கிறது.
தொடர்ந்து ஸ்டார் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் “ஸ்டார்” திரைப்படம், 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்தால் தான் ஹிட் பட்டியலில் இணையும் என்றும் கூறப்படுகிறது.
“ஸ்டார்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக “Bloody Beggar” என்ற திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் இயக்க, நெல்சன் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ மற்றும் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மோடி ஆபத்தான கொள்கையை ஏற்கெனவே செயல்படுத்த தொடங்கி விட்டார்”: கெஜ்ரிவால்