பயணிகள் கவனத்திற்கு.. 3 ரயில்களின் சேவையில் மாற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Train Service

தமிழகத்தில் மூர்த்தி பாளையம் – கரூர் இடையே ஸ்லீப்பர் புதுப்பித்தல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, செப்டம்பர் 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

அந்தவயில் செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும்செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ், (16846) இந்த 3 நாட்களிலும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிந்த பிறகு கரூரில் இருந்து ஈரோடு வரை, வழக்கமான நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

ADVERTISEMENT

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், (16844) புகழூர் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிந்த பிறகு புகழூரில் இருந்து திருச்சிராப்பள்ளி வரை வழக்கமான நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,(16322) கோவை – திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.

ADVERTISEMENT

இதனால் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, இங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகழூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.

இதற்குப் பதிலாக போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share