தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
கரூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்


சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கரூர் தொகுதி.. ரொம்பவே எதிர்பார்ப்புக்குரிய தொகுதி.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் . விஜயபாஸ்கர், திமுகவில் செந்தில் பாலாஜியின் விசுவாசி ஆசி தியாகராஜன், தவெகவில் 41 பேர் பலியான சம்பவத்துல சிறைக்கு போன மதியழகன் களம் காண்கிறாங்க.
அதிமுகவில 2 முறையும் திமுகவில 1 முறையும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்ற தொகுதி.
போன முறை கரூரில்தான் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றிருந்தார். போன 2021-ல் அதிமுகவின் எம்.ஆர். விஜயபாஸ்கரை 12,448 ஓட்டுகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி தோற்கடிச்சாரு..
நமது சர்வே முடிவுபடி,
திமுக –40 %
அதிமுக –37 %
தவெக-14 %
நாதக-8 % வாக்குகள் பெறும்
3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
