கடந்த நவம்பர் 2025ல் இருந்து திமுகவின் கரூர் கம்பெனியிடம் இருந்து ரூ.15 லட்சத்திற்கான ஒரு பேக்கேஜ் வந்தது. ‘2026 தேர்தலில் திமுகதான் ஜெயிக்கப் போகிறது’ என யூ டியூப் சேனலில் சொல்லுங்கள் என்றனர் என கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ தெரிவித்தார்.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்: “‘மனமார்ந்த வணக்கம்’ என்று கூறினால் ட்ரோல் செய்துவிடுவார்கள்; எனவே ட்ரோலில் வந்ததையே கூறிவிடலாம் என்று சிரித்தவாறே’மன்மத வணக்கம்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “இங்கு வயதான தாத்தா வரை ‘கனிமொழி’ என்றால் தெரிகிறது. ‘மேனா மினுக்கி என்ன செய்திருப்பார்?’ எனக் கேட்டிருப்பார்கள். நான் உங்களுக்காக கடமை செய்யக் கண்டிப்பாக இருப்பேன்.
தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி சட்டசபை நிகழ்வுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உதயநிதி பிரதர் ஜோசியக்காரரைப் பற்றிப் பேசும்போது வந்துச்சு ஒரு கடுப்பு அங்கு பேச முடியாதே.. நமக்கு என்று ஒரு மரபு இருக்கிறது என தலைவர் சொல்லி இருக்கிறாரே.. சிரித்தாலும் பிரச்சனை அழுதாலும் பிரச்சனை. அன்று இதை சொல்ல வில்லை. இன்று இதை சொன்னால் ரீச் ஆகும். இதே ஜோசியரிடம் கடந்த நவம்பர் 2025ல் இருந்து திமுகவின் கரூர் கம்பெனியிடம் இருந்து ரூ.15 லட்சத்திற்கான ஒரு பேக்கேஜ் வந்தது. ‘2026 தேர்தலில் திமுகதான் ஜெயிக்கப் போகிறது’ என ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் சொல்லுங்கள் என்றார்கள். அப்போது நான் கட்சியில் இல்லை. தளபதியிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அப்போதே ‘திமுக வராது’ எனக் கூறினேன். இருந்தாலும் ‘திமுக ஜெயிக்கும்’ என்று கூறச் சொன்னார்கள்.
‘சட்டசபையில் எதிர்க்கட்சியினர் என்ன செய்தாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும்’ எனக் கூறிவிட்டார்கள். ’26 கார்கள் வைத்திருக்கிறேன்’ எனச் செய்திச் சேனல்களில் வெளியாகி உள்ளது. நாங்கள் சம்பாதிக்கிறோம், வைத்திருக்கிறோம்; நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சோஷியல் மீடியாவில் பேசும் உங்களுக்குத் தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுங்கள். உங்கள் வீட்டில் இருந்து பேசிய ரெக்கார்ட் என் செல்லிடப்பேசியில் (Mobile Phone) உள்ளது.
என்னை ‘அழகான பொம்மை’ என்கிறார்கள். இந்த அழகான பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட. சட்டசபையில் இதையெல்லாம் கூடப் போடுங்கள், எங்கள் தலைவர் எதுவும் சொல்ல மாட்டார்.
2031-இல் இரண்டு கட்சிகளெல்லாம் இருக்காது; தவெக மட்டும்தான் இருக்கும். நான் செய்வதில் சில சங்கடங்கள் இருக்கலாம், அதற்குப் பதில் சொல்லக் காலம் வரும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் தயவுசெய்து ஜெயித்து விடுங்கள்; கடுமையான உழைப்பைக் கொடுங்கள்.
நான் கட்சிக்
