இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்ட் 13) நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஓம்.பிர்லா தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த தேநீர் விருந்தை, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
திமுக சார்பில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். இது தமிழக அரசியலில் பேசு பொருளானது.
இதுதொடர்பாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இன்று (ஆகஸ்ட் 14) கேள்வி எழுப்பினர்,
நீங்கள் சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டது சர்ச்சையாகியிருக்கிறதே?
”ஏன்… அதில் என்ன சர்ச்சை இருக்கிறது. நாங்கள் இடத்தை மாற்றுவதற்கு கேட்டிருந்தோம். அதை கேட்கத்தான் போனோம்”
இந்தியா கூட்டணியில் இருந்து கலந்துகிட்டதால்….
”நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை”
இந்தியா கூட்டணியில் இல்லையா?
”நாங்கள் இல்லை… காங்கிரஸ் தான் இருக்கிறது”
