நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் (Parliament Monsoon Session) மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், ஜூலை 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ந் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 25 நாட்களில் 19 அமர்வுகள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தொடரின் போது மக்களவையில் 11 மசோதாக்களும், மாநிலங்களவையில் 2 மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆகும்.
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த அவசரச் சட்டம் – 2026
- வருமான வரி திருத்த அவசரச் சட்டம் – 2026 ஆகிய அவசரச் சட்டங்களின் விதிகளை மாற்றி அமைத்து உள்ளடக்கிய இரண்டு மசோதாக்கள் இரு அவைகளாலும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, பரிசீலனைக்காக இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
பொதுத் தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் அச்சங்களை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொதுத் தேர்வு முறையின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, 2024-ம் ஆண்டின் மூலச் சட்டத்தைத் திருத்துவதற்காக, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடலாகப் போற்றப்படும் ‘வந்தே மாதரம்’ பாடலை 1971-ஆம் ஆண்டின் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் கொண்டுவருவதற்காக இச்சட்டம் திருத்தப்படுகிறது. மேலும், ‘வந்தே மாதரம்’ பாடுவதைத் வேண்டுமென்றே தடுத்தல் அல்லது அதைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் குற்றமாக்குவதையும், தேசியப் பாடலுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கி இதுபோன்ற செயல்களைத் தண்டனைக்குரியதாக்குவதையும் உறுதி செய்யும் மசோதா நிறைவேறியது.
மழைக்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள்
- தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026
- பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026
- உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026
- ஒதுக்கீட்டு (எண்.3) மசோதா, 2026
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி (திருத்த) மசோதா, 2026
- வங்கிப் பதிவேடுகள் சாட்சிய மசோதா, 2026
- வரி விதிப்பு பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026
- கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026
- தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (திருத்த) மசோதா, 2026
- தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026
- சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026
