கல்லக்குடியில் தொடங்கி சென்னை பூங்கா நகர் வரை.. இந்தி திணிப்புக்கு கனிமொழி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை இந்தி மொழி பெயர் பலகைகளாக மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி, ”கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை” என தெரிவித்துள்ளார்

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share