“ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?” – கனிமொழி எம்பி காட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Kanimozhi asked What is the governors hatred

ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என கனி மொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின செய்தியில், நமது மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. கடந்த 2024ல் 56 சதவிகித அளவுக்கு போக்ஸோ பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்துள்ளதை சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் 33 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டு கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆளுநருக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

ADVERTISEMENT

இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share