தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 16) சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மீதான மானியக்கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. Kamal Haasan meets MK Stalin
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, அக்கட்சியின் துணைத்தலைவர் ஏ.ஜி.மெளரியா, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன். இந்த தீர்ப்பு நமக்கு சாதகமானது என்று சொல்வதை விட இந்தியாவிற்கே சாதகமானது. இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டும்.
ராஜ்யசபா சீட் குறித்து இந்த சந்திப்பில் பேசவில்லை. ராஜ்யசபா தேர்தலில் யார் போட்டியிடுவது என்று எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.