மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் ‘இந்தி’க்காக தமிழ் நீக்கமா? உண்மை என்ன?

Published On:

| By Mathi

Kallalagar Temple-Madurai-Hindi

மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் ‘இந்தி’க்காக தமிழில் எழுதப்பட்டிருந்த கோயில் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்படுவதை தமிழக அரசு மறுத்துள்ளது.

”மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில், தமிழ்- ஆங்கிலம்- இந்தியில் கோயிலின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன; தற்போது தமிழில் எழுதப்பட்டிருந்த கோயில் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக” செய்திகள் வெளியாகின.

ADVERTISEMENT

இதனை தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், “மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல். வதந்திகளை பரப்பாதீர்கள்” என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளதுடன் கோயில் நுழைவாயில் படங்களையும் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழ்நாட்டு கோவிலில் இந்தியில் ஏன் எழுதப்பட்டுள்ளது? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share