கள்ளக்குறிச்சியில் ஸ்டாலின்.. ரூ. 1,773.67 கோடி திட்ட பணிகள் தொடக்கம்! கலைஞர் சிலை திறப்பு!

Published On:

| By Mathi

CM Stalin

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) ரூ.1,773.67 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் செல்கிறார். முற்பகல் 11 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் காலணி உற்பத்திக்கான ஆலையில் ஆய்வு செய்கிறார்.

ADVERTISEMENT

இதன் பின்னர் தியாகதுருகம் திம்மலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.

  • கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் ரூ.100.80 கோடி மதிப்பிலான 2,525 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து
    வைக்கிறார்.
  • பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள
    ரூ.81.59 கோடி செலவிலான கூடுதல் வகுப்பறைக் கட்டங்கள் திறக்கப்படுகின்றன.
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.7.19 கோடி செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி உள்ளிட்டவை திறக்கப்படுகின்றன.
  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு திறக்கப்படுகிறது.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள ரூ.1 கோடி செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் திறக்கப்படுகிறது.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தாட்கோ சார்பில் கிராம அறிவு மையங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கான ரூ.386 கோடி மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.
  • அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

கலைஞர் சிலை

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share