இந்தியாவில் உலக வணிக அமைப்புக் கூட்டம்!

By Balaji

|

Published on 18 Dec 2017, 12:00 AM

வருகிற பிப்ரவரி மாதத்தில் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கான உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் ஒன்று இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் குறித்து மத்திய வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு கூறுகையில், “பிப்ரவரி மாதத்தில் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டத்துக்கான திட்டச் செயல்பாடுகள் உருவாக்கப்படவுள்ளது. நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளை நம்மைப் போன்ற கருதுகோள்களைக் கொண்ட பிற நாடுகளுடன் சேர்ந்து இக்கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம். உணவுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தப் பட்டியலில் நேரடியாக இணையாத நாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் முறையிடவுள்ளோம்” என்றார்.

ADVERTISEMENT

முன்னதாக அர்ஜென்டினாவில் நடந்த உலக வணிக அமைச்சுக் கூட்டத்தில் உலகின் வளர்ந்த நாடுகள் பல முதலீடுகளை மேம்படுத்தும் வகையிலும், மின்னணு வர்த்தகத்துக்குக் கொள்கை உருவாக்குவதிலும், பாலின இடைவெளியைக் குறைக்கவும், மானியங்களைக் குறைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றின. குறிப்பாக மீன்வளத் துறையில் முறைகேடுகளைத் தடுப்பதாகக் கூறி மானியங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவை குறித்து முறையிடவும் இக்கூட்டம் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel