கழிவுகளை எரிக்கும்போது பலி : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

Published On:

| By christopher

judge gr swamninathan order to tn govt to give 10 lakh compensation

தெரிந்தே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்தவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (ஜூலை 10) உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கலையரசன். கடந்தாண்டு மனப்பாறை பழைய அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்கும்போது அவரது உடலில் தீப்பற்றியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து கலையரசனின் உயிரிழப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர் வழங்கிய உத்தரவில், “உயிரிழந்த கலையரசன் வாக்குமூலத்தில் குப்பைகளை எரிக்க அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளார். மருத்துவக்கழிவுகளில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களும் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தெரிந்தே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, மகனை இழந்து நிற்கும் அப்பாவி மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினால் எந்த பாதிப்பும் வராது. எனவே பாதிக்கப்பட்டுள்ள கலையரசனின் தந்தை அர்ஜூனனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பஞ்சுமிட்டாய்… பானிபூரி… நஞ்சாகும் உணவுகள் – மக்களே உஷார்!

திரிபுராவில் தீ போல் பரவும் எச்.ஐ.வி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share