தை மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்

Published On:

| By Selvam


தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம்.

பணியிடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் ஈடேறும். மேலிடத்தின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள்.

வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். விட்டுக்கொடுத்துப் போனால் அது நிலைக்கும். உறவுகள் வருகை உண்டு. சுபகாரியங்கள் அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். சோம்பல் தவிர்த்தால் அது தொடரும்.

அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். மேலிடத்தின் பாராட்டு மகிழ்ச்சி தரும்.

கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலன் தரும். திட்டமிடலில் சோம்பல் வேண்டாம்.

வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது.

சுளுக்கு, வழுக்கிவிழுதல், காயம், கூரான பொருட்கள் குத்துதல் ஏற்படலாம், கவனமாக இருங்கள்.

சிவன் வழிபாடு சீரான நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share