அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுதீக்கு இரையாகியுள்ளது. இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். ஏராளமான விலங்குகளும் பலியாயாகியுள்ளன.
ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகி கிடக்கிறது. காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் சூப்பர் ஸ்கூப்பர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஹெலிகாப்டர்கள் பெரிய வாளி போன்ற அமைப்பை பயன்படுத்தி அருகிலுள்ள ஏரிகளில் இருந்து நீரை அள்ளி எடுத்து சென்று தீ மீது கொட்டுகின்றன. ஆனால், சூப்பர் ஸ்கூப்பர் விமானங்கள் சற்று வித்தியாசமான முறையில் இயங்குகிறது.
இந்த விமானம் ஏரியில் தரையிறங்கி 160 கி.மீ வேகத்தில் படகு போல மின்னல் வேகத்தில் செல்லும். அப்போது, 12 விநாடிகளில் 6 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சி டேங்கரில் சேகரித்து கொள்ளும். தொடர்ந்து 400 கி.மீ வேகத்தில் சென்று எரியும் நெருப்பு மீது தண்ணீரை துல்லியமாக கொட்டும் திறன் கொண்டது.
இந்த விமானத்தின் இறக்கை 93 அடி நீளம் கொண்டது. விமானம் 65 அடி நீளம் கொண்டது. தீயை எதிர்த்து போராடுவதற்கு சூப்பர் ஸ்கூப்பர் விமானம் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
-எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தை மாத நட்சத்திர பலன்கள்: சுவாதி
தினமும் 50 ரூபா கட்டுங்க, 35 லட்சத்தை அள்ளுங்க – போஸ்ட் ஆபிஸ் புதிய திட்டம்!