அசத்தல் விலை: வந்தாச்சு ’ஜியோபாரத் 4ஜி’ போன்!

Published On:

| By Jegadeesh

பிரபல டெலிகாம் நிறுவனமான ஜியோ, அதன் சமீபத்திய தயாரிப்பான ‘ஜியோபாரத் 4ஜி’போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த‘ஜியோபாரத் 4ஜி’ போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு  2 ஜி முறையை பயன்படுத்தியவர்கள் இந்த புதிய போனை வாங்குவதன் மூலம் 4 ஜி பயன்பாட்டில் இணையலாம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  இந்த ‘ஜியோபாரத் 4ஜி’ போன் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்:

ஜியோ பாரத் கே1 கார்பன் போன் அம்சங்கள்

இந்த ஜியோ போன் 1.77 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவில் 720p ரெசொலூஷன் வருகிறது.

பேட்டரி

நல்ல பேக்கப் கொண்ட 1000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை கழற்றி மாட்டிக் கொள்ளலாம். ஆகவே, பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், போனை மாற்ற வேண்டியது கிடையாது. இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 24 மணி நேரம் பேக்கப் கிடைக்கும்.


ரேம்

0.05 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 128 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.
இதில் சிங்கிள் நானோ சிம்  போர்ட் உள்ளது.

மேலும் இந்த ஜியோ போனில் எல்இடி பிளாஷ் உடன் 0.3 எம்பி விஜிஏ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பீச்சர் போன்களில் கொடுக்கப்படும், டார்ச்லைட் , 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரோடியோ போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

யுபிஐ பயன்பாடு

யுபிஐ பேமெண்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக ’ஜியோ பே’ ஆப் போனில் வருகிறது. அதேபோல வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், ஜியோ நிறுவனத்தின் ஜியோடிவி ஜியோ சினிமா, ஜியோ சாவன் உள்ளிட்ட ஜியோ ஆப்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஜியோ பாரத் கே1 கார்பன் போனில் VoLTE சப்போர்ட் வருகிறது. ஆகவே, மற்ற எந்த பீச்சர் போன்களையும்விட வாய்ஸ் கால்கள் மற்றும் இன்டர்நெட் அனுபவமானது, ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக இருக்கும். மேலும், இது பிளாக்  மற்றும் கிரே ஆகிய 2 நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) அமேசான் இ-காம் தளத்தில் இந்த ‘ஜியோபாரத் 4ஜி’ விற்பனையை தொடங்கியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்கிறதா?

தனி ஒருவன்-2: மீண்டும் இணையும் ஜெயம்ரவி-நயன்தாரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share