ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அக்.2-ல் ரிலீஸ்!

Published On:

| By Mathi

Jason Sanjay's 'Sigma' Releasing on October 2

தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் “சிக்மா – Sigma” அக்டோபர் 2-ந் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் அரசியலில் குதித்ததால் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் திரை உலகில் இருந்து விலகினார். அவரது மகன் ஜேசன் சஞ்சய், திரை உலகில் இயக்குநராக நுழைந்துள்ளார்.

ADVERTISEMENT

ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் நாயகன் சந்தீப் கிஷன்; நாயகி ப்ரியா அப்துல்லா.
ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகின. யுவன் சங்கர் ராஜா பாடிய ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

ADVERTISEMENT

சிக்மா திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய்யின் தந்தை விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ அப்போது வெளியானதால் சிக்மா வெளியாவது தாமதமானது.

சிக்மா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share