GALLERY: பாரதிராஜா, பாக்யராஜ் நினைவுகளை போற்றிய ‘ராஜகோபுரங்கள் – நினைவு உற்சவம்’

Published On:

| By Mathi

Raja Gopurangal - Ninaivu Uthsavam: Tamil Cinema Honors Bharathiraja, Bhagyaraj

இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இருவரது நினைவுகளைப் போற்றும் ‘ராஜகோபுரங்கள்- நினைவு உற்சவ’ நிகழ்ச்சி சென்னையில் இன்று ஆகஸ்ட் 16-ந் தேதி நடைபெற்றது.

நடிகர் கமலஹாசன் பங்கேற்பில், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, தயாரிப்பாளர் தமிழ்க் குமரன், சித்ரா லட்சுமணன், நடிகர் நாசர், இயக்குனர் பாண்டியராஜன், நடிகர் பார்த்திபன் ஆகியோர் இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, முகமது பர்வேஸ், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்று பாரதிராஜா- பாக்யராஜ் ஆகியோரது பெருமைகளையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share