தனது மகன் இயக்கிய முதல் படமான ’சிக்மா’வை காண முதல்வரின் மனைவி சங்கீதா வருகை தந்துள்ளார்.
முதல்வர் விஜய் – சங்கீதாவின் மகனான ஜேசன் சஞ்சய்(25), லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் முதல் படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தொடர்பாக பேட்டியளித்த சஞ்சய், ’சிக்மாவை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என எனது குடும்பத்திலிருந்து எனக்கு முதல் அழைப்பு வந்தால் மகிழ்ச்சி’ என கூறியிருந்தார். அதேபோன்று தனது தங்கையான திவ்ய சாஷா எதுவாக இருந்தாலும், நேரடியாக சொல்லிவிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தனது மகனின் படத்தை பார்ப்பதற்காக சஞ்சயின் அம்மாவும், முதல்வர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா, மகள் திவ்யாவுடன் கமலா தியேட்டருக்கு வருகைத் தந்துள்ளார்.
கமலா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை படக்குழுவினர் கேக் வெட்டி தொடங்கி வைத்தனர்.
தற்போது தனது அம்மா, தங்கையுடன் சஞ்சையும் படம் பார்த்து வருகிறார்.
