தமிழக முதல்வர் விஜய்யின் மகனும் திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் ரசிகர் மன்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று (அக்டோபர் 29) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்னுடைய அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீழே பட்டியலிடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Instagram
User name – jason.sanjay_official
Link – https://www.instagram.com/jason.sanjay_official?igsh=NjcwbXRnNThtcmw0
Facebook
User name – Jason Sanjay
Link – https://www.facebook.com/share/1DHDJ5qM5K/
Twitter
User name – Jason Sanjay Official
Link – https://x.com/official_jsj
இவை தவிர, பிற டிஜிட்டல் தளங்களில் என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தைப் பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும், பக்கங்களும் முற்றிலும் போலியானவை.
எனவே, மேலே குறிப்பிடப்படாத வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள் (Comments), நேரடிச் செய்திகள் (Messages) அல்லது வணிகத் தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் குறித்து..
நாங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ, சங்கத்தையோ அல்லது சமூகக் குழுவையோ அங்கீகரிக்கவில்லை, தொடங்கவில்லை அல்லது அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது “அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம்” அல்லது “அங்கீகரிக்கப்பட்ட குழு” என்று உரிமை கோரும் எந்தவொரு குழுக்களும், பக்கங்களும் அல்லது கணக்குகளும் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் அங்கீகரிக்கப்படாதவை ஆகும். இவ்வாறு ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
